மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கிருஷ்ணகிரி ஒன்றியம் நாரலப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி ஒன்றியம் நாரலப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். தாசில்தார் நீலமேகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி உமாபதி, கவுன்சிலர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முகாமில் 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட ரூ.10 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜய், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் ராஜலட்சுமி, வருவாய் ஆய்வாளர் குசேலகுமார், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.