தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி சாவு

தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2023-08-18 18:30 GMT

பெரம்பலூர்-துறையூர் ரோடு கல்யாண் நகரை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (வயது 53). இவர் பெரம்பலூரில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 9-ந்தேதி மதியம் வீட்டில் படுத்திருந்த பிச்சை பிள்ளை எழுந்திருக்க முயன்றபோது கீழே தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதனால் அவரை மீட்ட அவருடைய குடும்பத்தினர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கடந்த 12-ந்தேதி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிச்சை பிள்ளை நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்