கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கோரிக்கை

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-11-21 20:12 GMT

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சிக்னல் பெற்று செட்டாப் பாக்ஸ்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். தற்போது அந்த நிறுவனம் சில மாதங்களாக செட்டாப் பாக்ஸ்கள் வழங்காததால் வாடிக்கையாளர்கள் பலரை இழந்து வருகிறோம். கடந்த 19-ந்தேதி காலை 6 மணி முதல் இதுவரை எங்களுக்கு வழங்கிய செட்டாப் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இல்லை. ஆனால் நாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை தவறாமல் செலுத்தி வருகிறோம். தற்போது அரசு சிக்னல் வருவதில் தடை ஏற்பட்டுள்ளதால் கேபிள் டி.வி. வாடிக்கையாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கேபிள் டி.வி. ஆபரேட்டர் தொழிலை காப்பாற்ற தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்