அரசு பஸ்சை வழிமறித்து டிரைவருக்கு அரிவாள் வெட்டு

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-04-30 18:45 GMT

உளுந்தூர்பேட்டை:

கடலூர் மாவட்டம் குடுமியான்குப்பத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 47). அரசு பஸ் டிரைவர். இவர், உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் வழித்தடத்தில் பஸ்சை ஓட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆலடி, பாலக்கொல்லை வழியாக விருத்தாசலத்துக்கு புறப்பட்டார். இந்த பஸ் இலுப்பையூரில் சென்றபோது 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் பஸ்சில் ஏறி, முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை கண்டக்டர் மற்றும் பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்