233-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த "தேர்தல் மன்னன்" பத்மராஜன்

233-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த “தேர்தல் மன்னன்” பத்மராஜன்

Update: 2023-01-31 21:06 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன்நகரை சேர்ந்தவர் பத்மராஜன். இவர் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளதால் "தேர்தல் மன்னன்" என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் டயர் பஞ்சர் பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறேன். முதல்முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டேன். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இதுவரை 32 முறை நாடாளுமன்ற தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல், 6 துணை ஜனாதிபதி தேர்தல், 72 முறை சட்டமன்ற தேர்தல், கர்நாடகாவில் 3 தேர்தல், உள்ளாட்சி தேர்தல், கவுன்சிலர் தேர்தல் உள்ளிட்டவற்றில் போட்டிட்டு உள்ளேன். முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். நான் தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். இப்போது 233-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்