கூடலூரில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால்போக்குவரத்துக்கு இடையூறு-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கூடலூரில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதை மற்றும் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது, எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Update: 2023-05-03 19:30 GMT

கூடலூர்

கூடலூரில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதை மற்றும் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது, எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதிய இடவசதி இல்லை

கூடலூர் நகருக்கு நடுவட்டம், மசினகுடி, தேவர் சோலை, தேவாலா, ஓவேலி, பந்தலூர், சேரம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்று வட்டார கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். மேலும் கேரளா- கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த நகரமாக உள்ளது.

மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகள், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து முக்கிய சாலை வழியாக ஐந்துமுனை சந்திப்பு, புதிய பஸ் நிலையத்துக்கு சாலை செல்கிறது.

நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள்

இதன் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடை பாதைகள் உள்ளது. இதில் இடது பக்க நடைபாதைகள் மீது வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் நீண்ட நேரம் வாகனங்கள் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் நிலைமை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிறுவர்கள், பெண்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்.

இதனால் விபத்துகளில் சிக்கும் சூழ்நிலையும் தொடர்கிறது. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் வரம்பு மீறி நடைபாதைகளில் நிறுத்துவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் எந்தவித பொறுப்பும் இன்றி நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதைகளின் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்