தணிக்கை அதிகாரிகளின் நடவடிக்கையால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக புகார்

தணிக்கை அதிகாரிகளின் நடவடிக்கையால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபார சங்கத்தினர் புகார் கொடுத்தனர்.

Update: 2022-12-09 18:45 GMT


தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் நடேசன் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மார்க்கெட்டுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தேனி மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து விவசாய விளைபொருட்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த விவசாய பொருட்களை விவசாயிகள், தேனி மார்க்கெட் மற்றும் தேனி மார்க்கெட் கமிட்டியில் வைத்து விற்பனை செய்கிறார்கள். பொருட்களை விற்பனை முடிந்த பின்பு எடை மதிப்பீடு செய்து பில் போட்டு வியாபாரிகளுக்கு வினியோகம் செய்வார்கள்.

எங்களது சங்க உறுப்பினர்கள் அனைவரும் முறையான பில் போட்டு ஜி.எஸ்.டி. கட்டி வருகிறோம். இந்நிலையில் தணிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் தேனி நகருக்குள் வரும் விவசாய வாகனங்களை நிறுத்தி வைத்து அபராதம் செலுத்திய பின் சரக்குகளை கொண்டு செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். இதனால் தேனி மாவட்ட வியாபாரம் பெரிதும் பாதிக்கிறது. விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். விவசாய பொருட்களை சந்தைப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேனி நகருக்குள் வரும் பெரிய லாரிகளில் ஏற்றி வரும் சரக்குகளை தணிக்கை செய்யுங்கள். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பும் கொடுக்கிறோம். விவசாய சரக்குகளை தணிக்கை என்ற பெயரில் நிறுத்தி அபராதம் விதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்