25-வது வார்டில் இன்று இடைத்தேர்தல்

சிவகாசி யூனியனுக்குட்பட்ட 25-வது வார்டுக்கும், பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-08 19:08 GMT

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்குட்பட்ட 25-வது வார்டுக்கும், பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 25-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி உள்பட மாவட்டம் முழுவதும் 25 ஊரக உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இதில் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 25-வது வார்டில் தி.மு.க. சார்பில் சின்னதம்பி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈஸ்வரன், சுயேட்சைகளாக அசோக்குமார், கணேசன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் வாக்களிக்க வசதியாக விஸ்வநத்தம், முருகன் காலனி, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் 9 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஆறுமுகச்சாமி, விஸ்வநாதன், சக்திவேல், முத்துராஜ், கணேசன் ஆகிய 5 பேர் போட்டியிடுகிறார்கள். 10-வது வார்டு பகுதி வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக காரனேசன் பெண்கள் பள்ளியில் 2 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர். வாக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குசாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. பின்னர் 1 மணி நேரம் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் வாக்கு பெட்டிகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் சிவகாசி யூனியன் அலுவலகத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்பாடு

இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 12-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி யூனியன் 25-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட முடியாத நிலையில் தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சுயேட்சைகள் களத்தில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்