காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல்
உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது
அம்பை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் காலியிடங்களுக்கு நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அம்பை யூனியன் வாகைகுளம் பஞ்சாயத்து 8-வது வார்டு உறுப்பினர் கலைச்செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் நடந்தது. இதில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
சேரன்மாதேவி யூனியன் உலகன்குளம் பஞ்சாயத்து முதலாவது வார்டு உறுப்பினர் மறைவையொட்டி, நேற்று இடைத்தேர்தல் நடந்தது. புலவன்குடியிருப்பில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியில் மொத்த வாக்காளர்கள் 279 பேரில் 93 பெண்கள் உள்பட 179 பேர் வாக்களித்தனர்.