ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள 31 பதவிகளுக்கான இடைத்தேர்தல் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள 31 பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

Update: 2022-06-19 17:05 GMT


கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில், காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 1, ஊராட்சி மன்றத்தலைவர்கள் 4, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 26 ஆகிய 31 பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் கால அட்டவணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. வேட்புமனு பரிசீலனை வருகிற 28-ந்தேதி அன்று நடைபெறும், வருகிற 30-ந்தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் வாக்குப்பதிவு 9.7.2022 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12.7.2022 அன்று காலை 8 மணிக்கு தொடங்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மாதிரி நடத்தை விதிகள், தேர்தல் நடைமுறைகள் முடிவுறும் நாளான 14.7.2022 வரை அமலில் இருக்கும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்