பேராவூரணியில் நுங்கு விற்பனை மும்முரம்

பேராவூரணியில் நுங்கு விற்பனை மும்முரம்

Update: 2023-05-24 19:56 GMT

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. பேராவூரணியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வெயில் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதற்காக வீட்டிலே முடங்கி கிடக்கின்றனர். வெளிேய செல்பவர்கள் வெயில் கொடுமையில் இருந்து தங்களை காப்பதற்காக இளநீர், கருப்புசாறு, நுங்கு, மோர், குளிர்பானம் ஆகியவற்றை அருந்தி வருகின்றனர். பேராவூரணி பகுதிகளில் நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நுங்கு உடலுக்கு குளிர்ச்சி என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். ரூ.50-க்கு 15 நுங்குகளும், தண்ணீர் நுங்கு ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எனவே தமிழக அரசு எங்களுக்கு காப்பீடு வசதி செய்து தர வேண்டும். பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்