பெருந்துறையில் பரபரப்பு:செல்போன் திருடர்களை துரத்தி பிடித்த பொதுமக்கள்

பெருந்துறையில் செல்போன் திருடர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்தனர்.

Update: 2023-07-29 22:01 GMT

பெருந்துறை

பெருந்துறையில் செல்போன் திருடர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்தனர்.

செல்போன் திருட்டு

பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 23). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் பகல் 1.30 மணியளவில் பெருந்துறையை அடுத்துள்ள மடத்துப்பாளையத்துக்கு வாடகைக்கு சென்றார். பின்னர் கோவை மெயின்ரோட்டுக்கு வந்து ஆட்டோவை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், ஆட்டோவின் டிரைவர் பகுதியில் வைத்திருந்த 2 செல்போன்களை எடுத்துக்கொண்டு ஓடினர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாமோதரன், 'திருடன் திருடன்' என்று சத்தம் போட்டார்.

துரத்தி பிடித்தனர்...

தாமோதரனின் சத்தத்தை கேட்ட அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் திருடர்களை துரத்தி பிடித்தனர். பின்னர் இருவரையும் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர்கள், சித்தோடு சாணார்பாளையத்தை சேர்ந்த சபரீஷ் (வயது 23), திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த சம்பத்குமார் (37)் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சபரீஷையும், சம்பத்குமாரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போன்களையும் மீட்டனர். பட்டப்பகலில் செல்போன் திருடர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்