பஸ் நிறுத்தத்தை விட்டு தள்ளி பஸ்களை நிறுத்தக்கூடாது-தமிழரசி எம்.எல்.ஏ. பேச்சு

இலவச பஸ்சில் பெண்களை ஏற்றி செல்ல வேண்டும். பஸ் நிறுத்தத்தை விட்டு தள்ளி பஸ்களை நிறுத்தக்கூடாது என்று தமிழரசி எம்.எல்.ஏ.கூறினார்.

Update: 2022-07-05 19:14 GMT

திருப்புவனம், 

இலவச பஸ்சில் பெண்களை ஏற்றி செல்ல வேண்டும். பஸ் நிறுத்தத்தை விட்டு தள்ளி பஸ்களை நிறுத்தக்கூடாது என்று தமிழரசி எம்.எல்.ஏ.கூறினார்.

சாதாரண கூட்டம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். யூனியன் ஆணையாளர் ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலக அதிகாரிகள், பல்வேறு துறை அரசு அதிகாரிகள் வந்திருந்தனர்.

அது சமயம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி தமிழரசி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யூனியன் மேலாளர் கார்த்திகா மன்ற பொருட்களை வாசித்தார்.

அதன்பின்னர் தமிழரசி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அனைத்து கிராம பகுதிகளிலும் மாணவ-மாணவியர் காலை பள்ளிக்கு வரும் வகையில் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் எனவும், மாணவிகள் அதிகம்பேர் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர முடியவில்லையென என்னிடம் புகார் தெரிவித்தனர் என்றார். அதே நேரம் அரசு இயக்கும் பெண்களுக்கான இலவச பஸ்சில் கண்டிப்பாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பெண்களை ஏற்றிச் செல்ல வேண்டும். நிறுத்தத்தை விட்டு தள்ளி சென்று பஸ்களை நிறுத்தக்கூடாது.

மின்தடை

திருப்புவனம் பகுதியில் அடிக்கடி ஏன் மின்தடை ஏற்படுகிறது என்றும் மின்தடையால் தான் அரசுக்கு கெட்ட பெயரே வருகிறது என்றார்.

மின்தடைக்கு மின் வயர்கள் பிரச்சினை காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா? இனிமேல் மழைக்காலம் ஆரம்பிக்க போகும் சூழ்நிலையில், அதற்குள் மின் பாதை வயர்களை பராமரிப்பு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இனிமேல் மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன், மாவட்ட கவுன்சிலர் கருப்பையா, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்