சோலார் பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
சோலார் பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி, பழனி, வெள்ளக்கோவில், மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு சாலைகள் சமன்செய்யப்பட்டு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.
மேலும், மேற்கூரையும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து முடித்த பிறகு பஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.