தர்மபுரி டவுன் போலீசார் தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த ஒரு பஸ்சில் ஒருவர் கையில் பையுடன் கீழே இறங்கினார். போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 40 மதுபாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் கம்பைநல்லூரை சேர்ந்த வேலு (வயது 39) என்பதும், பெங்களூருவில் இருந்து பஸ்சில் மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.