பேராவூரணி பஸ்நிலையத்தில் இருந்து அரசு கல்லூரிக்கு பஸ் இயக்கம்

பேராவூரணி பஸ்நிலையத்தில் இருந்து அரசு கல்லூரிக்கு பஸ் இயக்கம்

Update: 2023-03-26 18:36 GMT

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். பேராவூரணி நகரிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கல்லூரி அமைந்துள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் பேராவூரணி பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும் நிலை இருந்தது வந்தது. பஸ்நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் அசோக்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று பேராவூரணி பஸ் நிலையத்திலிருந்து தடம் எண் ஏ1, காலை 9 மணிக்கு கல்லூரி தொடங்கும் நேரத்திலும், மதியம் 2 மணிக்கு கல்லூரி விடும் நேரத்திலும் இரண்டு முறை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதேபோல் நகர பஸ் தடம் எண் பி.96, பேராவூரணியிலிருந்து சுமைதாங்கி, அண்ணா நகர், கென்னடி நகர், இந்திரா நகர் தூராங்குடி வழியாக பெருமகளூர் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த 2 அரசு பஸ்களையும் அசோக்குமார் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தமிழ்செல்வன், அரசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராணி, கிளை மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், நகரச் செயலாளர் சேகர், பேராசிரியர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்