புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி,
கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் குடிக்காடு பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று மாங்குடி எம்.எல்.ஏ. புதுவயல்-மித்திராவயல் வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ்சை குடிக்காடு வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தார். அதன்படி புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கும் நிகழ்ச்சியை மாங்குடி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், புதுவயல் பேரூராட்சி தலைவர் முகமது மீரா, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நாகராஜ், தியாகராஜ மூர்த்தி மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.