புதிய வழித்தடத்தில் பஸ்
புதிய வழித்தடத்தில் பஸ் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே பனிக்குறிப்பு கிராமத்தில் இருந்து காரியாபட்டிக்கு பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் தினமும் 5 கி.மீ. தூரம் நடந்து செல்லவேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பனிக்குறிப்பு பகுதிக்கு புதிய பஸ் வழித்தடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின் பேரில் பனிக்குறிப்பு கிராமத்தில் இருந்து காரியாபட்டிக்கு புதிய பஸ் வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.நேற்று பனிக்குறிப்பு கிராமத்திலிருந்து காரியாபட்டிக்கு புதிய பஸ் வழித்தடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, தி.மு.க. பிரமுகர் சின்னபோஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.