பஸ் மோதி வாலிபர் பலி
அம்மாசத்திரத்தில் பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தாா். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள கறிக்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அபூர்வராஜ். இவருடைய மகன் அருண்குமார் (வயது25). அம்மாசத்திரம் மணல் மேட்டு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வீரபாண்டி (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவிடைமருதூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அம்மா சத்திரம் மெயின் ரோட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீரபாண்டி (25) படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.