பஸ் கண்ணாடி உடைப்பு; 2 பேர் கைது

பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-06 20:15 GMT

சேரன்மாதேவி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). இவர் நெல்லையில் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சமாதானபுரத்திற்கு பஸ்சில் வந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவரான சேரன்மாதேவி பட்டன்காடுவை சேர்ந்த முத்துவேல் (34), கண்டக்டர் மேலசெவலை சேர்ந்த முத்துமாரியப்பன் (34) ஆகியோருக்கும் பயணிகளை பஸ்சில் ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரன் ஓட்டிவந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபாகரன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்