அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பஸ் வசதி

மாணவ-மாணவிகள் கலெக்டர் மேகநாதரெட்டியை சந்தித்து தங்களுக்கு பஸ் வசதி செய்து தரக்கோரினர்.

Update: 2022-09-06 19:30 GMT

காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பந்தனேந்தல் கிராமத்திலிருந்து பள்ளி நேரத்தில் வருவதற்கு பஸ் வசதி இல்லாத நிலையில் அவர்கள் நடந்து வர வேண்டிய நிலை இருந்தது.இந்தநிலையில் நேற்று அந்த மாணவ-மாணவிகள் கலெக்டர் மேகநாதரெட்டியை சந்தித்து தங்களுக்கு பஸ் வசதி செய்து தரக்கோரினர். உடனடியாக கலெக்டர் மேகநாத ரெட்டி போக்குவரத்துக்கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பள்ளி நேரத்தில் பஸ் வசதி செய்து தர உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்