முன்னால் சென்ற பஸ் மீது தான் ஓட்டிய பஸ்சை மோத விட்ட டிரைவர்

ஒரத்தநாட்டில் பஸ்சை இயக்குவதில் ஏற்பட்ட தகராறில் முன்னால் சென்ற பஸ் மீது தான் ஓட்டிய பஸ்சை டிரைவர் மோத விட்டார். இதனால் பயணிகள் அலறினர்

Update: 2022-10-29 20:30 GMT

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டில் பஸ்சை இயக்குவதில் ஏற்பட்ட தகராறில் முன்னால் சென்ற பஸ் மீது தான் ஓட்டிய பஸ்சை டிரைவர் மோத விட்டார். இதனால் பயணிகள் அலறினர்

பஸ்சை மோதினார்

தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்வதற்காக நேற்று மாலை இரண்டு தனியார் பஸ்கள் சில நிமிடங்கள் இடைவெளியில் ஒன்றின் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே இரு பஸ் டிரைவர்களுக்கும், நேரப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது பயணிகள் பஸ்சில் இருக்கும் போதே, பின்னால் வந்த பஸ் டிரைவர் முன்னால் சென்ற பஸ் மீது தான் ஓட்டி வந்த பஸ்சை மோதினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிரைவர்களை எச்சரித்து அலறினர்.

பரபரப்பு

மேலும் பஸ்களை சாலையில் நிறுத்தி விட்டு, பயணிகள் மத்தியில் இரு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் 2 பஸ்களையும் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்று சம்பந்தப்பட்ட டிரைவர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்