டோல்கேட்டில் பயணிகளை ஏற்றாமல் சென்ற பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பணி இடைநீக்கம்

டோல்கேட்டில் பயணிகளை ஏற்றாமல் சென்ற பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2023-06-30 21:11 GMT

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த டோல்கேட்டில் அரசு பஸ் ஒன்று பெண் பயணிகளை ஏற்றாமல் சென்றது. இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அரசு பஸ் டிரைவர் கண்ணன், கண்டக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையே அரசு பஸ் டிரைவர்கள் தரப்பில் கூறுகையில், செல்லியம்மன்நகர் பஸ் நிறுத்தத்துக்கும், டோல்கேட்டுக்கும் இடையே 200 மீட்டர்தான் தூரம் உள்ளது. மேலும் டோல்கேட்டில் பஸ் நிறுத்தம் கிடையாது. எனவே அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்