பஸ் மோதி தொழிலாளி சாவு

அருப்புக்கோட்டை அருகே பஸ் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2022-06-11 19:17 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70).தச்சு வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக அருப்புக்கோட்டையில் இருந்து செட்டிகுறிச்சி நோக்கி சைக்கிளில் மாரியப்பன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ராமசாமிபுரம் விலக்கு அருகே சர்வீஸ் சாலையில் இருந்து புறவழிச்சாலைக்கு சென்ற போது சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மாரியப்பன் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மாரியப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இ்து குறித்து அரசு விரைவு பஸ் டிரைவர் விளாத்திகுளத்தை சேர்ந்த செல்வராஜ் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்