பஸ் மோதி போக்குவரத்து போலீஸ்காரர் படுகாயம்

ராஜபாளையத்தில் பஸ் மோதி போக்குவரத்து ேபாலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-06-19 18:47 GMT

ராஜபாளையம்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா நகரை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது50). இவர் ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார். பழைய பஸ் நிலையம் எதிரே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் சுரேஷ்குமார் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சக்கரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் வன்னியப்பட்டி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் முனியராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்