ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு மினிவேன் சென்னையை நோக்கி சென்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் மேம்பாலம் சாலையில் சென்ற போது வேன் பழுதானதால் சாலையோரம் நிறுத்தப்பட்டது.
அந்த சமயத்தில் பின்னால் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென மினிவேனின் பின்புறம் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த சிலர் லேசான காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.