சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி பலி

சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி பலி

Update: 2022-06-03 14:32 GMT

மன்னார்குடி:

திருத்துறைப்பூண்டியை அடுத்த புழுதிகுடியை சேர்ந்தவர் குமார் (வயது38). விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் இரவு சைக்கிளில் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்