அரசு டவுன் பஸ்களை வாலாந்தரவை கிராமம் வழியாக இயக்க வேண்டும்
ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரிய பட்டினம் கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ்களை வாலாந் தரவை கிராமம் வழியாக இயக்க மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரிய பட்டினம் கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ்களை வாலாந் தரவை கிராமம் வழியாக இயக்க மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
டவுன் பஸ்
ராமநாதபுரம் அருகே உள்ளது வாலாந்தரவை கிராமம். இந்த வாலாந்தரவை கிராமத்தில் ெரயில் நிலையம் உள்ளதோடு மட்டுமல்லாமல் மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரெயில்களும் வாலாந் தரவை ெரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இந்த நிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இருந்து வாலாந்தரவை வழியாக பெரியபட்டினம் கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் வழக்கமாக வாலாந்தரவை கிராமம் வழியாக இயக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அரண் மனையில் இருந்து பெரிய பட்டினம் செல்லும் டவுன் பஸ்கள் வாலாந்தரவை கிராமம் வழியாக செல்லாமல் நேராக வழுதூர் விலக்கு ரோடு வழியாக பெரியபட்டினம் செல்கிறது.
கடும் அவதி
இதனால் வாலாந்தரவையை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் மற்றும் ரெயில்களில் இருந்து இறங்கி வரும் பயணிகளும் ரெயில் நிலைய பயணிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அந்த கிராம மக்கள் தெரிவித்தும் வாலாந்தரவை கிராம வழியாக பெரியப்பட்டினம் செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
மனு
இதைத்தொடர்ந்து நேற்று வாலாந்தரவையை சேர்ந்த கிராம மக்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்படும் அனைத்து அரசு டவுன் பஸ் களையும் வாலாந்தரவை வழியாக இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு கொடுத்தனர்.