போகி பண்டிகையின் போதுபழைய பொருட்களை எரிப்பதைதவிர்க்க வேண்டும்

போகி பண்டிகையின்ேபாது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்பதால் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டர் ேவண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-01-11 17:09 GMT

போகி பண்டிகையின்ேபாது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்பதால் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டர் ேவண்டுகோள் விடுத்துள்ளார்.

பழையன கழிதல்

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

புகையில்லா போகி

இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளது.

எனவே போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் புகையில்லா போகி கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்