குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்
குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகில் குடியிருப்புகள், கல்வி நிலையங்கள் உள்ள பகுதியிலும், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் செல்லும் பகுதியிலும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி தீயிட்டு எரிப்பதால் நச்சுப்புகை எழுகிறது. அந்த வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இது குறித்து பல முறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். எனவே குப்பைகளை எரிப்பதை தடுக்க ேவண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.