பரமன்குறிச்சியில்சாமியாரின் உருவப்படம் எரிப்பு

பரமன்குறிச்சியில்சாமியாரின் உருவப்படத்தை தி.மு.க.வினர் எரித்தனர்.

Update: 2023-09-07 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ள உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா சாமியாரின் உருவபொம்மையை பரமன்குறிச்சி மெயின் பஜாரில் தி.மு.க.வினர் எரித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு உடன்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், பரமன்குறிச்சி பஜார் கிளைக் செயலாளர் பூங்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்