பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி

பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-02-21 19:28 GMT

திருச்சி பெரிய கடைவீதி பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோவில் 87-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று இரவு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 10.30 மணி அளவில் அங்காள பரமேஸ்வரி மற்றும் பேச்சி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பேச்சி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், அருட்காட்சியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு மேல் மயானகொள்ளை எனப்படும் அஸ்தி பூஜை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் பூஜகர் ராஜேந்திரன் பேச்சியம்மன் வேடத்தில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க கையில் சூலாயுதம் ஏந்தி பெரிய கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு, நந்தி கோயில் தெரு, சிந்தாமணி பஜார், ஓடத்துறை வழியாக ஓயாமரி சுடுகாட்டிற்கு சென்று அங்கு எரிந்து கொண்டிருந்த ஒரு பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்டு, பின்னர் குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்