பீரோவை உடைத்து நகை திருட்டு

விருதுநகரில் பீேராவை உடைத்து நகையை திருடி சென்றனர்.

Update: 2023-01-08 19:29 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). இவர் உறவினரை பார்ப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 18 கிராம் நகை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்