மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குன்னத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-15 18:27 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மாட்டு வண்டி தொழிலாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க கோரியும், அரசே மணல் குவாரிகளை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் சடையமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்