திருவாடானை,
திருவாடானை தாலுகா வெள்ளையபுரத்தில் பதனக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசாமி உடையார் நினைவு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. திருவாடானை தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பதனக்குடி ரவி தலைமை தாங்கினார். திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் முன்னிலை வகித்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என மூன்று பிரிவுகளாக பந்தயம் நடந்தது. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு பாரம்பரிய வீர விளையாட்டு காளைகள் வளர்ப்போர் நலச்சங்க மாநில தலைவர் கண்ணன், செயலாளர் மாறன், பொருளாளர் ரவி, முன்னாள் மாநில தலைவர் மோகன சாமி குமார், திருவாடானை வட்டார பந்தய மாட்டு உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் விவேக் சிவசாமி,தொழிலதிபர் காஞ்சி திருஞானசம்பந்தம், முதல் நிலை அரசு ஒப்பந்தக்காரர் கடம்பூர் விஸ்வநாதன், தலைமையாசிரியர் செபஸ்டியான் ஆகியோர் பரிசுகள் மற்றும் வெற்றிக்கோப்பைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் கணேச பிரபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பரக்கத் அலி, மோகன்ராஜ், கூகுடி சரவணன், மங்களக்குடி அப்துல் ஹக்கீம், டி.நாகனி ராஜேந்திரன், ஓரியூர் நிரோஷா கோகுல், கட்டிவயல் முத்துராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் அருணாச்சலம், முன்னாள் ஊராட்சி தலைவர் பதனக்குடி அப்பாவு சிவகங்கை மாவட்ட தலைவர் தம்பா, தஞ்சை மாவட்ட தலைவர் வள்ளல் நாட்டார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.