கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் ஒன்றியத்திற்குட்ட பனங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-04-12 18:45 GMT

காரைக்குடி

கல்லல் ஒன்றியத்திற்குட்ட பனங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட பனங்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பனங்குடி-கண்டிப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் பசும்பொன் வண்டியும், 2-வது பரிசை நகரம்பட்டி கண்ணதாசன் வண்டியும், 3-வது பரிசை துருவம்பட்டி கே.ஆர்.மாதவன் வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயம்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது.

முதல் பிரிவில் முதல் பரிசை அரும்பனூர் ரமேஷ் வண்டியும், 2-வது பரிசை சிங்கினிப்பட்டி பெரியசாமி வண்டியும், 3-வது பரிசை புதுப்பட்டி ஆதிக்ராஜா வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை குமாரப்பட்டி ஜெயராஜ் வண்டியும், 2-வது பரிசை புதுப்பட்டி கோமாலியம்மன் வண்டியும், 3-வது பரிசை துரும்புபட்டி சாதனா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்