ஏரியூர் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம்
சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
சிங்கம்புணரி ஒன்றியம் ஏரியூர் கிராமத்தில் உள்ள மலைமருந்தீஸ்வரர், முனிநாதன் மற்றும் தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஏரியூர்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 66 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வைத்தியா வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் விஜயவேல் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கினிப்பட்டி பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை அலவாக்கோட்டை பன்னீர்செல்வம் வண்டியும், 3-வது பரிசை புதுசுக்காம்பட்டி குணசேகரன் வண்டியும் பெற்றது.
சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொண்குண்டுப்பட்டி செல்லை வண்டியும், 2-வது பரிசை வல்லாளப்பட்டி சுந்தர்ராஜ் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தம்பட்டி கதிரேசன் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு பந்தயத்தில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் வண்டியும், 2-வது பரிசை ஆபத்தாரணப்பட்டி பிரபுபழனிச்சாமி வண்டியும், 3-வது பரிசை ம.ஒத்தப்பட்டி ஜெகநாதன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை மேலூர் புவனேஸ்வரி எலக்ட்ரிக்கல்ஸ் வண்டியும், 2-வது பரிசை மாம்பட்டி செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை மாம்பட்டி சிதம்பரம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.