பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
பொங்கல் விழாவை முன்னிட்டு காளையார்கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காளையார்கோவில்,
பொங்கல் விழாவை முன்னிட்டு காளையார்கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
காளையார்கோவிலில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மொத்தம் 54 வண்டிகள் பங்கேற்றன. முதலில் நடைபெற்ற பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டன. அதில், முதல் பரிசை திருச்சி மாவட்டம் உறையூர் நம்பி வண்டியும், 2-வது பரிசை சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி வண்டியும், 3-வது பரிசை அருப்புக்கோட்டை ராமலிங்கம் வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை திருவாதவூர் தன்வந்த்பிரசாத் வண்டியும், 2-வது பரிசை சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி வண்டியும், 3-வது பரிசை உடப்பன்பட்டி கணேஷ் வண்டியும் பெற்றது.
பரிசுகள்
இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 25 வண்டிகள் கலந்துகொண்டன. இந்த போட்டியில் முதல் பரிசை பரவை சோனைமுத்து வண்டியும், 2-வது பரிசை இளங்கிப்பட்டி அர்ச்சுனன் வண்டியும், 3-வது பரிசை குளக்கட்டபட்டி மீராராவுத்தர் வண்டியும், 4-வது பரிசை அதிகரை வேங்கை வண்டியும், 5-வது பரிசை தாயமங்கலம் முத்துமாரி வண்டியும், 6-வது பரிசை மாம்பட்டி சிதம்பரம் வண்டியும் பெற்றது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்.