மாட்டு வண்டி பந்தயம்

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த மாட்டு வண்டிகள் முதலிடம் பிடித்து பரிசு பெற்றன.

Update: 2022-08-21 17:08 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த மாட்டு வண்டிகள் முதலிடம் பிடித்து பரிசு பெற்றன.

மாட்டு வண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தில் சந்தி மரிச்சயம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 48 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

முதலிடம்

இந்த போட்டியை விளாத்திகுளம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் சடையாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் நெல்லை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றன.

பின்னர் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்