கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி மற்றும் கல்லல் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-07-06 18:45 GMT

காரைக்குடி,

காரைக்குடி மற்றும் கல்லல் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி கழனிவாசல் ஐயுளி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கழனிவாசல்-சூரக்குடி சாலையில் நடைபெற்றது. மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி, சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயத்தை மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை கூத்தலூர் சாத்தையா மற்றும் ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன் வண்டியும், 3-வது பரிசை விராமதி தையல்நாயகி கருப்பையா மற்றும் மாவூர் பாலு வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் மற்றும் பொன்குண்டுப்பட்டி செல்லையா ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை காரைக்குடி ரிதன்யாஸ்ரீ வண்டியும், 3-வது பரிசை திருவாதவூர் புதுப்பட்டி சிவபாலன் வண்டியும் பெற்றது.

கல்லல்

இதேபோல் கல்லல் அருகே குருந்தம்பட்டு பெரியநாச்சியம்மன் கோவில் ஆனி படைப்பு திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் குருந்தம்பட்டு-வேப்பங்குளம் சாலையில் நடைபெற்றது. மொத்தம் 36 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை எரிச்சி கமல் மற்றும் கொடிக்குளம் கவுதம் ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை வல்லாளபட்டி மகாவிஷ்ணு வண்டியும், 3-வது பரிசை கேரளா வி.எம்.பிரதர்ஸ் வண்டியும், பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. இதில் முதல் பிரிவில் முதல் பரிசை குருந்தம்பட்டு நாச்சியார் பைனான்ஸ் வண்டியும், 2-வது பரிசை சொக்கநாதபுரம் பாலு வண்டியும், 3-வது பரிசை ஒடித்திக்காடு சிவசோலை வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை திருமயம் ஆர்.ஆர்.வைஷ்ணவி வண்டியும், 2-வது பரிசை கொன்னப்பட்டி காமராஜ் வண்டியும், 3-வது பரிசை உடகுளம் முத்துநாச்சி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்