காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே உள்ள பெரியகோட்டையில் செங்கரை முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் செங்கரையில் இருந்து மித்திரங்குடி சாலையில் நடைபெற்றது. 24 வண்டிகள் கலந்து கொண்ட போட்டியில் பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக போட்டி நடைபெற்றது.
அதன்படி முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்து கொண்டன. அதில் அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டி முதல் பரிசும், கொடிக்குளம் கவுதம் மற்றும் சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டிகள் 2-வது பரிசும், அறந்தாங்கி ஆசிக் கே.கே.டிராவல்ஸ் வண்டி 3-வது பரிசும் பெற்றது.
பரிசுகள்
இதை தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்து கொண்டன. அதில் ஆட்டுக்குளம் பாபுத்தேவர் மற்றும் காலக்கண்மாய் வீரபாலா வண்டிகள் முதல் பரிசும், கருவிடைசேரி சாத்தையா மற்றும் பொய்கைவயல் முத்துக்கருப்பர் வண்டிகள் 2-வது பரிசும், அதிகரை வேங்கைசேர்வை மற்றும் புதுப்பட்டி இளையராஜா வண்டிகள் 3-வது பரிசும் பெற்றன.
பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.