மாட்டு வண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கூத்தங்குடியில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய்வர எட்டு மைல் தூரமும், சிறிய மாடு போய்வர ஆறு மைல் தூரமும் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டது.
பரிசு
பந்தயமானது கூத்தங்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கட்டுமாவடி சாலை வரை நடைபெற்றது. பந்தயம் நடைபெற்ற சாலையின் இருபுறமும் ரசிகர்கள் கூடி நின்று மாட்டு வண்டிகளை உற்சாகப்படுத்தினார்கள். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கூத்தங்குடி பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.