மாட்டு வண்டி எல்கை பந்தயம்
மணமேல்குடி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா கீழ மஞ்சக்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 54 மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, சின்ன மாடு ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.
பரிசு
பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கேடயம் வழங்கப்பட்டது. சாலையில் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு களித்தனர். கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.