மாட்டு வண்டி எல்கை பந்தயம்

மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-07-06 18:46 GMT

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொன்னகாட்டியில் சக்தி விநாயகர் மற்றும் அரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயம் பெரியமாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 24 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடு வண்டிக்கு போக வர 8 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாடு வண்டிக்கு போக வர 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

பரிசு

மாட்டு வண்டிகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. மாட்டு வண்டிகள் ஒன்றையொன்று முந்தி சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது. அப்போது சாலையின் இருபுறங்களில் கூடிநின்ற பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து பெரிய மாட்டு வண்டி மற்றும் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்