மாட்டு வண்டி போட்டி

பாளையங்கோட்டை அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது.

Update: 2023-05-01 20:27 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் பெருமாள் சுவாமி, அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழாவையொட்டி, மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டி நடந்தது. மேலக்குளம் பகுதியில் இருந்து தொடங்கி சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்கிட் மாநகரம் வரையிலும் சென்று மீண்டும் மேலக்குளம் திரும்பி வரும் வரையில் மாட்டு வண்டி பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது.

மாட்டு வண்டி போட்டியை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டி போட்டியினை தமிழ்நாடு மாட்டு வண்டி போட்டியாளர் சங்க தலைவர் வேலங்குளம் கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலக்குளத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் சென்று மீண்டும் மேலக்குளம் திரும்பி வரும் வகையில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது.

பந்தயத்தில் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. போட்டிகளில் வென்ற மாட்டு வண்டி, குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், நெல்லை மாவட்ட மாட்டு வண்டி போட்டியாளர் சங்க தலைவர் காசி பாண்டியன், பெரியபெருமாள், சுப்பையா, நவீன் போஸ், பரமராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை மேலக்குளம் பெரியபெருமாள், சுஜித்வேல், விஜயவேல் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்