கருக்கல்வாடியில் எருதாட்டம் 250 காளைகள் பங்கேற்பு

கருக்கல்வாடியில் எருதாட்டம் நடைபெற்றது. இதில் 250 காளைகள் களம் இறக்கப்பட்டன.

Update: 2023-01-31 20:00 GMT

தாரமங்கலம், 

எருதாட்டம்

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கல்வாடியில் பிரசித்தி பெற்ற பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் மாலை 3 மணிக்கு ேகாவில் மாடு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கருக்கல்வாடி, தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, இளம்பிள்ளை, அமரகுந்தி, முனியம்பட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக களம் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

இந்த காளைகள் 3 முறை கோவிலை வலம் வர செய்து களத்தில் இறக்கி விடப்பட்டன. அந்த மாடுகள் முன்பு துணியால் செய்த பொம்மைகளை காண்பித்து இளைஞர்கள் விளையாட்டு காட்டினர்.

இந்த எருதாட்டத்தை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் எருதாட்டத்தை கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்