கிட்டம்பட்டியில் எருதாட்ட நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில் நடந்த எருதாட்ட நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

Update: 2023-01-17 18:45 GMT

கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில் நடந்த எருதாட்ட நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

எருதாட்ட நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில் எருது விடும் விழா நடந்தது. இதில் காளைகளை குறிப்பிட்ட தூரத்திற்கு ஓட விடும் நிகழ்ச்சி நடந்தது.

இதன் தொடர்ச்சியாக கிட்டம்பட்டியில் 2-வது நாளாக கூலியாட்டம் என அழைக்கப்படும் எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி 11 காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டன. அந்த காளைகளுக்கு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காளைகள் கோவிலை சுற்றி 3 முறை வந்தது.

2 பேர் காயம்

அப்போது காளைகளை பிடிக்க சென்ற இளைஞர்களை காளைகள் விரட்டின. மேலும் காளைகள் 2 வாலிபர்களை தூக்கி வீசின இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த எருதாட்ட நிகழ்ச்சியை கிட்டம்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. எருதாட்ட நிகழ்ச்சியையொட்டி 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்