காளை விடும் திருவிழா
படவேடு அருந்ததிபாளையம் பகுதியில் காளை விடும் திருவிழா
கண்ணமங்கலம்
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு அருந்ததிபாளையம் பகுதியில் இன்று காளை விடும் திருவிழா நடந்தது.
அதில் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் பங்கேற்றன.
காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக ஓட விடப்பட்டன. அதில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற காளைக்கு முதல் பரிசாக ரூ.50,001-ம், 2-வது பரிசாக ரூ.40,001-ம், 3-வது பரிசாக ரூ.30,001 உள்பட 44 காளைகளுக்கு பல்வேறு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.