பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-08 13:36 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா, முள்ளிமுனை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 300-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாமல் மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். ஒன்று மற்றும் 2-ம் வகுப்பில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த் குழந்தைகள் படித்து வரும் கட்டிடங்கள் சுமார் 37 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இதில் ஒரு கட்டிடம் ஓட்டுக் கட்டிடம். இந்த கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்து விட்ட நிலையில் மழை பெய்தால் பள்ளிக்குள் மழை தண்ணீர் விழுந்து குழந்தைகள் அமர்ந்து படிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள், பெற்றோர்கள் சார்பில் ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி மேகமலை கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்