பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-02 15:34 GMT

பாலியல் தொல்லை விவகாரத்தில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி திருவண்ணாமலை ரவுண்டானா அருகில் வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும், இதில் தொடர்புடைய பா.ஜ.க. மந்திரி பிரிஜ்பூஷணை கைது செய்யவும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் நடந்து சென்று பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு போலீசார் பேரிகார்டுகளை வைத்து அவர்களை தடுத்தனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்